பொது அமைப்புகள் என்ற பெயரில் ரகசியமான முறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கங்களின் பதிவு இலாகாவான ரோஸ் அறிவித்துள்ளது.
போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் அந்த அமைப்புகளை, ரோஸ் அணுக்கமான கண்காணித்து வருவதாகவும்,/ அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படுவது உட்பட கடும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சங்கங்களின் பதிவு அலுவலகம் தயாங்காது என்று அதன் தலைமை இயக்குநர் முஹமாட் நவார்டி சாட் எச்சத்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் பொது அமைப்புகளின் நடவடிக்கையினால் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு திட்டத்தின் வாயிலாக அந்த அமைப்புகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும்முஹமாட் நவார்டி சாட் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


