மலாக்கா, ஆகஸ்ட்.14-
அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட லவ் ஸ்கேம் மோசடிக் கும்பல் ஒன்றை மலாக்கா போலீசார் முறியடித்துள்ளனர்.
மலாக்கா போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பின்னிரவு 2.45 மணிளவில் மலாக்கா, கிளேபாங்கில் உள்ள மூன்று ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனையிட்டதில் நால்வர் பிடிபட்டனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்த 3 ஆடவர்களும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
39 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரிடமிருந்து 2 மடிக்கணினிகள், 8 கைப்பேசிகள், 6 கடப்பிதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 15 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று டத்தோ ஸுல்கைரி குறிப்பிட்டார்.








