நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப் 18 நீர் பெருக்கு விழா. மோரீப் கடற்கரை பகுதியில் கொண்டாடப்படும் இந்தியர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப் பெருகை முன்னிட்டு இந்திய சிறு வியாபாரிகள், கடற்கரையொட்டிய பகுதியில் தங்களது வர்த்தக கூடாரங்களை இன்று அமைக்கத் தொடங்கியுள்ளனர்.
கோலலங்காட் நகராண்மைக் கழகம் ஒதுக்கிய பிரத்தியேகப் பகுதிகளில் வர்த்தக கூடாரங்களை அமைக்கும் பணியில் இந்திய வர்த்தகர்கள் ஈடுபட்டு வருவதை இன்று காலையில் காண முடிந்தது.
மோரீப் கடற்கரையைப் போல ஆண்டு தோறும் ஆடிப் பெருக்கு கடல் விழா, அருகில் உள்ள கேரீத்தீவு, சிப்பாங் பாகான் லாலாங் போன்ற கடற்கரை பகுதிகளில கொண்டாடப்பட்டு வருகிறது
அந்த வகையில் கேரீத்தீவு கடற்கரை பகுதியில் நாளை கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவில் கேரீத்தீவு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் ஒன்று அமைக்கப்படும் என்று கேரீத்தீவு தேசிய தோட்ட தொழிற்சங்க தலைவர் சரவணன் கூறினார்.
தற்போது வெயில் காலமாக இருப்பதால் கடற்கரை பகுதிக்கு வரும் இந்தியர்கள் வசதிக்காக இந்த தண்ணீர் பந்தல் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


