Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கேங் மிஸான் கொள்கைக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கேங் மிஸான் கொள்கைக் கும்பல் முறியடிப்பு

Share:

வட மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கேங் மிஸான் கொள்ளைக் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

வீடு புகுந்து கொள்ளையிடும் இக்கும்பல் கடந்த மே 20 ஆ ம் தேதி பீடோங், சுங்கைப்பட்டாணியில் ஒரு வர்த்தகத் தளத்தில் நுழைந்து 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பில் பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து கேங் மிஸான் கும்பலுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹசான் தெரிவித்தார்.

இக்கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 25 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்களும் , ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ வான் ஹசான் குறிப்பிட்டார்.

Related News