Dec 4, 2025
Thisaigal NewsYouTube
13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்: கோவில் குருக்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

13 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்: கோவில் குருக்கள் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.07-

13 வயது சிறுவன் ஒருவனைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கோவில் குருக்கள் ஒருவர், மலாக்கா, அலோர் காஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

32 வயது P. தேவா என்று அந்த கோவில் குருக்கள், நீதிபதி அய்ஸா கைருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

13 வயது சிறுவனை வாய்ப்புணர்ச்சி செய்ததாக அந்த கோவில் குருக்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த ஜுலை 4ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மலாக்கா, தாமான் மலாக்கா பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் அந்த கோவில் குருக்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் கோவில் குருக்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த கோவில் குருக்கள் விசாரணை கோரியிருப்பதால் அவரை நிபந்தையுடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News