ஷா ஆலாம், செப்டம்பர்.28-
உலகச் சேமிப்பு நாளை முன்னிட்டு உயர்க்கல்வி நிதிக் கழகமான பிடிபிடிஎன், 'சிம்பான் எஸ்எஸ்பிஎன் சேமிப்பு மாதம் 2025' திட்டத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. "உங்கள் குழந்தையின் சூப்பர் ஹீரோவாக மாறுங்கள்" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், செப்டம்பர் 26 முதல் நவம்பர் 2 வரை நீடிக்கிறது. குழந்தைகளின் கல்விச் செலவுக்காகச் சேமிப்பது, அவர்களின் சவாலான எதிர்காலப் பயணத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பொறுப்பான முதலீடு என்று உயர்க்கல்வி அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அனிசீ இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இதுவரை 22.31 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சேமிப்புடன், 7.09 மில்லியன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 220 மில்லியன் ரிங்கிட் திரட்ட பிடிபிடிஎன் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அனிசீ இப்ராஹிம் மேலும் கூறினார்.








