Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் தொகை 33.7 மில்லியன்
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் தொகை 33.7 மில்லியன்

Share:

2023 ஆம் ஆண்டு, நான்காவது காலாண்டில் மலேசிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மலேசிய புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் மலேசிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மக்கள் தொகையின் எண்ணிக்கை, 2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவ்விலாகா குறிப்பிட்டுள்ளது.

இதில் ஆண்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 72 லட்சத்திலிருந்து 1 கோடியே 77 லட்சமாக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 58 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது என்று புள்ளி விவர இலாகாவின் தலைமை இயக்குநர் Uzir Mahidin தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை, சராசரி விகிதத்தில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 110 ஆண்கள் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது என்று Uzir Mahidin சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News