கிள்ளான், செப்டம்பர்.25-
பூலாவ் இண்டா இண்டஸ்ட்ரியல் பார்க் அருகே இன்று போலீஸ் சோதனையின் போது, 7000 ரிங்கிட் லஞ்சமாக வழங்குவதாகக் கூறிய வங்கதேச ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளுடன் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த அந்த ஆடவரைப் போலீசார் நிறுத்திய போது தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில், அக்காரை மடக்கிப் பிடித்த போலீசார், அதில் சோதனையிட்ட போது, அந்த ஆடவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.
எனினும், விசாரணையில், அவரது காரில் இருந்த இருவருக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் வெளிநாட்டினர் பலர் முறையான ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிவதாகவும், மளிகைக் கடை நடத்துவதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.








