Jul 26, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

Share:

மலேசியாவின் தேசக் கட்டமைப்பில் கணக்கியல் வல்லுநர்கள் கூட்டுப் பங்காளிகளாக இன்னும் பெரிய பங்கினை ஆற்ற வேண்டும் என்று இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஜிசான் கேட்டுக்கொண்டார்.

2026-ஆம் ஆண்டிற்கான மலேசிய கனக்காளர்களின் அமைப்பு நடத்திய அனைத்துலக கணக்காளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் கணக்காளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா தற்போது இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் கடுமையான நிதி ஒழுக்கத்தை நோக்கி மாறி வரும் வேளையில், தரவுகளின் நேர்மையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சர் அமீர் ஹம்ஸா கூறியுள்ளார்.

திட்டம், நிதி மேலாண்மை, வரி நிர்வாகம் மற்றும் கணக்கு ஆய்வு ஆகியவற்றின் மூலம் கணக்கியல் வல்லுநர்கள் நாட்டின் பொருளாதார முடிவெடுக்கும் தரத்தை நேரடியாக மேம்படுத்துகிறார்கள் என்றும், அவர்கள் வெறும் எண்களின் துல்லியத்தை மட்டும் பார்க்காமல், ஆதாரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: மலேசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: மலேசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

பேஸ்புக் முதலீட்டு மோசடி: இல்லத்தரசியிடம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரிங்கிட் பறிப்பு

பேஸ்புக் முதலீட்டு மோசடி: இல்லத்தரசியிடம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரிங்கிட் பறிப்பு

7 மில்லியன் பிணைத் தொகை கடத்தல் வழக்கு - 6 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

7 மில்லியன் பிணைத் தொகை கடத்தல் வழக்கு - 6 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலாய்க்காரர் அல்லாதோரின் நாட்டுப் பற்றைக் கேள்விக்குட்படுத்துவதை பெரிக்காத்தான் நிறுத்த வேண்டும் – கோபிந்த் சிங் டியோ காட்டம்

மலாய்க்காரர் அல்லாதோரின் நாட்டுப் பற்றைக் கேள்விக்குட்படுத்துவதை பெரிக்காத்தான் நிறுத்த வேண்டும் – கோபிந்த் சிங் டியோ காட்டம்

மாணவனைத் தாக்கிய 3 பள்ளி மாணவர்கள் கைது: அம்பாங்கில் பரபரப்பு

மாணவனைத் தாக்கிய 3 பள்ளி மாணவர்கள் கைது: அம்பாங்கில் பரபரப்பு

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்