Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
தற்போதைய செய்திகள்

தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

Share:

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் இன்று வெளியானது. இதில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக! " என்று பதிவிட்டுள்ளார்.

Related News