Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தாசெக் பெராவில் நிலம் தோண்டும் இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

தாசெக் பெராவில் நிலம் தோண்டும் இயந்திரம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Share:

பகாங் மாநிலம் தாசெக் பெரா பகுதியில் நேற்று துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நிலம் தோண்டும் இயந்திரம் கவிழ்ந்து, அதை இயக்கிய 26 வயது நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இயந்திரத்தின் அறைக்குள் சிக்கியிருந்த அவரை தீயணைப்பு வீரர்கள் மாலை 4.10 மணியளவில் மீட்டனர்.

இது குறித்து பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் முஹமட் சலாஹுடின் இசா கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.11 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், டிரியாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று படகு மூலம் தேடுதல் நடத்தி, இயந்திரத்துக்குள் சிக்கியிருந்த நபரை மீட்டனர்.

எனினும், நீரிலிருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்ததாகவும் முஹமட் சலாஹுடின் இசா தெரிவித்துள்ளார்.

Related News