உணவு விநியோகிப்பு பணியாளரை மானபங்கம் செய்ய முயற்சி செய்த 57 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் பேரா, சுங்கை யில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உணவு விநியோகிப்பாளரான 34 வயதுடைய ஆடவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் அன்றிரவே கைது செய்யப்பட்டதாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நஹிம் அஸ்னாவி தெரிவித்தார்.
தமது வீட்டிற்கு கொண்டு வருவதற்கான உணவை முன்உறுதி செய்த அந்த ஆடவர், அந்த உணவுப்பொருளை ஒப்படைக்க வந்த உணவுப்பணியாளரை சட்டென்று கையைப் பிடித்து ,வீட்டிற்குள் இழுத்து, மானபங்கம் செய்ய முயற்சித்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முகமட் நாயிம் குறிப்பிட்டார்.
இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஆடவரின் முரட்டுப்பிடியிலிருந்து தப்பித்த உணவு விநியோகிப்பாளர் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாக முகமட் நஹிம் தெரிவித்தார்.
பிடிபட்ட நபர் விசாரணைக்கு பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


