கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-
மாணவி ஸாரா கைரினா மரணமடைந்த சம்பவம் குறித்துப் புக்கிட் அமான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், மாணவர் நல பொறுப்பாசிரியர், அனைத்து விடுதி கண்காணிப்பாளர்களும் தற்காலிகமாக சபா மாநிலக் கல்வித் துறைக்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குத் தற்போது கல்வி அமைச்சின் முக்கிய முன்னுரிமையாக உள்ளதாகவும், காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் வெளிப்படையாக, முழுமையாக நடைபெறும் எனவும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.








