Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கம்போங் ஜாவா வீட்டுடைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க மந்திரி பெசார் அனுமதி
தற்போதைய செய்திகள்

கம்போங் ஜாவா வீட்டுடைப்புத் திட்டத்தை ஒத்தி வைக்க மந்திரி பெசார் அனுமதி

Share:

ஷா ஆலாம், நவம்பர்.10-

சிலாங்கூர், கம்போங் ஜாவா, லாட் 11113 நிலப்பகுதியில் வீற்றிருக்கும் வீடுகளை உடைக்கும் திட்டத்தை ஒத்தி வைக்க சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அனுமதி அளித்துள்ளதாக செந்தேசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையோர நெடுஞ்சாலைத் திட்டமான WCE- க்கு வழிவிடும் வகையில் அந்த வீடுகள், நாளை செவ்வாய்க்கிழமை உடைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேரந்தவர்கள் SmarSewa திட்டத்தின் கீழ் இடம் மாறிச் செல்வதற்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் தாம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூத்த குடிமக்கள், குறிப்பாக வயது கடந்தவர்கள், புதிய இடத்திற்கு இடம் மாறிச் செல்வதற்கு அவர்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்கள் புதிய இடத்திற்கு மாறிச் செல்ல முடியாது என்று சொல்லவில்லை. மாறாக, கால அவகாசத்தை மட்டுமே கோரியுள்ளனர். அவர்கள் எதிர்நோக்கிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரம் மந்திரி பெசார் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக டாக்டர் குணராஜ் கூறினார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்