கோத்தா பாரு, அக்டோபர்.07-
தனது இரு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை ஒருவரும், அவரின் இரு மகன்களும் கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
65 வயது தந்தையும், 24 மற்றும் 33 வயதுடைய இரு மகன்களும் நீதிபதி ஸுல்கிஃப்லி அபிலா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு பிற்பகல் 2 மணியளவில் பாசீர் மாஸில் உள்ள தனது வீட்டில் 12 மற்றும் 16 வயதுடைய இரு மகள்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த முதியவரும், அவரின் இரு மகன்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.








