2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்துபவர்களுக்குக் கட்டணக் கழிவு கொடுப்பது இனி தொடரப்படாது என உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ செரி முஹமாட் காலெட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், அதன் இறுதி முடிவு நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்துகிறவர்களுக்கு 20 விழுக்காடு வரை கட்டணக் கழிசு வங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ஆயிரத்து 800 வெள்ளிக்கும் குறைந்த வருமானம் பெறுகிறவர்களுக்கு 6 மாதங்கள் வரை கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசம் ஒத்தி வைக்கப்படும் சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இலக்கிவியலாக்கல், புத்தாக்கம், மாணவர்களின் தங்குமிட வசதி ஆகிய மூன்று மிக்கிய விவகாரங்களில் உயர்க்கல்வி அமைச்சு கவனம் செலுத்த இருப்பதாக அமைச்சர் மேலும் சொன்னார்.








