Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பயன்படுத்தப்படாத லோரியில் 27.2 கிலோ போதைப்பொருள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பயன்படுத்தப்படாத லோரியில் 27.2 கிலோ போதைப்பொருள்

டிச.5-

போலீசாரின் கண்களை மறைக்கும் நோக்கில் பயன்படுத்தப்படாத பழைய லோரியை போதைப்பொருளை பதுக்கி வைப்பதற்கு கிடங்காக பயன்படுத்தி வந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ஜோகூர் ஜெயாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பழைய லோரியில் ஜோகூர் போதைப்பொருள் துடைத்தொழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சுஹாமி இஷாக் தெரிவித்தார்.

அந்த லோரியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த உள்ளூரைச் சேர்ந்த 32 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →