இன்று திங்கட்கிழமை இரவில் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்படவிருந்த மூன்று விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள மிச்சவுங் புயலினால் பெய்து வரும் அடை மழையில் சென்னை விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் இன்றிரவு கோலாலம்பூரிலிருந்து சென்னை புறப்படவிருந்த 3 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனங்கள் தனது அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளன.
இரவு 9.00 மணிக்கு புறப்படவிருந்த மெலிண்டே ஏர் என்ற பாத்திக் ஆயிர் நிறுவனத்தின் ID 6018 விமானம், இரவு 9.40 மணிக்கு புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸின் எம்எச் 180 விமானம் மற்றும் இரவு 9.40 மணிக்கு புறப்படவிருந்த ஏர் ஆசியாவின் ஏகே13 விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.








