கிள்ளான், நவம்பர்.25-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிள்ளானில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் போலீஸ்காரரைக் காரினால் மோதி காயம் விளைவித்தப் பின்னர் தப்பிச் சென்ற ஆடவர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
33 வயது Mohammad Aroif Selamat என்ற அந்த நபர், நீதிபதி Sharifah Hascindie Syed Omar முன்னிலையில் நிறுத்தப்பட்டு, போலீஸ்காரரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்ட அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார். கடந்த நவம்பர் 13 ஆம் தேதி கிள்ளானில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








