Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

பத்து பஹாட், ஆகஸ்ட்.30-

மாந்திரீகச் சடங்கு தொடர்பில் மூன்று நபர்கள், ஜோகூர், பத்து பஹாட் ஷரியா நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர். மாந்திரீகச் சடங்கு செய்ததுடன் அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாக அந்த மூன்று நபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

35 வயது முகமட் சுஹாய்ல், 45 வயது அஸ்மான் முகமட் மற்றும் 40 வயது அனுவார் பன்டி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.

கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் பத்து பஹாட், ஜாலான் பசார் பாரிட் ராஜாவில் மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News