தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப் ரொக்க நிதிப்புழக்க நெறுக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுவதை அந்த வாரியம் இன்று மறுத்துள்ளது.
அதே வேளையில், பணி ஓய்வுப் பெறுகின்றவர்கள் தங்கள் சேமிப்பை மீட்பதற்குத் தடை விதிக்கும் வகையில் 1991 ஆம் ஆண்டு இபிஎப் சட்டத்தில் திருத்தம் செய்யவிருப்பதாக கூறப்படுவதையும் அந்த வாரியம் வன்மையாக மறுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.
தொழிலாளர்களின் அந்திமக்கால நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இபிஎப், தனது கடப்பாட்டை நிறைவு செய்யும் வகையில் எப்போதுமே போதுமான ரொக்க நிதிப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


