Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிசம்பர் 20 ஆம் தேதி வரை அடைமழை தொடரும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிசம்பர் 20 ஆம் தேதி வரை அடைமழை தொடரும்

கோலாலம்பூர், டிச. 13-


வடகிழக்குப் பருவமழையினால் இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கி, 20 ஆம் தேதி வரை நாட்டில் அடைமழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் கிழக்குக்கரை, மேற்குக்கரை, சரவாக்கின் மேற்கு, சபாவின் கிழக்குக்கரைகளிலும் இந்த அடை மழை தொடரும் என்று மெட் மலேசியா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரெங்கானு ஆய மாநிலங்களில் நேற்று வியாழக்கிழமை நிலவரத்தைப் போலவே இன்றும் அடை மழைத் தொடரும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →