Oct 15, 2026
Thisaigal NewsYouTube

Op Tunggak: அந்நிய ஓட்டுனர்களின் நான்கு லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட நிலுவை சம்மன்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோத்தா பாரு, ஜன.26-

கடந்த ஜனவரி 1 முதல் தொடங்கப்பட்ட "Op Tunggak" சோதனையின் மூலம், தாய்லாந்தைச் சேர்ந்த 163 வாகனங்களுடன் 182 வெளிநாட்டு ஓட்டுநர்கள் நிலுவையில் உள்ள சம்மன்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 4 இலட்சத்து 25 ஆயிரத்து 104 இங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச குற்றங்கள் ICP எனப்படும் அனைத்துலக சுழற்சி அனுமதியை தவறாகப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. 16 தாய்லாந்து வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி.

பெர்லிஸில் தடுத்து வைக்கப்பட்ட ஒரு வேனின் உரிமையாளர் மூன்று ஆண்டுகளில் 85 சம்மன்களைப் பெற்றிருந்தார், பின்னர் 25 ஆயிரத்து 500 ரிங்கிட் செலுத்தி அவற்றை தீர்த்து வைத்தார். தாய்லாந்து வாகனங்கள் நாட்டின் சட்டங்களை மீறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாட்டு ஓட்டுநர்கள் ICP அனுமதியை தவறாக பயன்படுத்துவதையும், பயணிகளை ஏற்றுவதையும் JPJ கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு