Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மாவ்கோம் கலைக்கப்படுகிறது, அந்தோணி லோக் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாவ்கோம் கலைக்கப்படுகிறது, அந்தோணி லோக் தகவல்

கோலாலம்பூர், ஜூன்.23-

போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்பட்டு வந்த மாவ்கோம் ( Mavcom ) எனப்படும் மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் கலைக்கப்படுவதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மாவ்கோம், வான் போக்குவரத்து இலாகாவின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மாவ்கோமில் பணியாற்றி வந்த 57 ஊழியர்கள், அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வான் போக்குவரத்து இலாகாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனினும் ஒவ்வோர் ஊழியரும், புதிய பொறுப்பை ஏற்க வேண்டி வரும் என்று அவர் விளக்கினார். வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மாவ்கோம் கலைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →