ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தலைமை ஏற்றுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது முழு தவணைக் காலத்தை நிறைவு செய்வதற்கு 70 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாக ஜ.செ.க. மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் ஆருடம் கூறியுள்ளார்.
அன்வார் தமது 5 ஆண்டு தவணைக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த வாய்ப்பு கிட்டத்தட்ட 70 விழுக்காடு அளவிலே உள்ளதாக முன்னாள் இஸ்கன்டார் புத்ரி, எம்.பி. யுமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
நாட்டின் 10 ஆவது பிரதமர் என்ற முறையில் அன்வார், 4 மாதங்களைக் வெற்றிகரமாக கடந்துள்ளார். அதே வேளையில், 15 ஆவது நாடாளுமன்றத்தின் 8 வாரக்கால தொடர் கூட்டத்தையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், அன்வாருக்கான இந்தப் பலப் பரீட்சை போராட்டத்தில் அவர் கிட்டதட்ட 90 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் அடிப்படையில் 5 ஆண்டுக்கால தவணைக் காலத்தை நிறைவுச் செய்யும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளதாக லிம் கிட் சியாங் ஆருடம் கூறியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
பிரதமரருக்கான முழு தவணைக் காலத்தை முடிக்க அன்வாருக்கு 70 விழுக்காடு வாய்ப்பு உள்ளது
Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


