Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக், இலாபுவானில் டீசல் மானிய விண்ணப்பம் மே 4 முதல் தொடக்கம்
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக், இலாபுவானில் டீசல் மானிய விண்ணப்பம் மே 4 முதல் தொடக்கம்

Share:

பாப்பார், ஏப்ரல்.26-

சபா, சரவாக், இலபுவான் ஆகிய மாநிலங்களில் உள்ள SKDS எனப்படும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானிய முறைமை விண்ணப்பங்கள் மே 4-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று உள்நாட்டு வணிகம் - வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற மானிய விலையில் டீசலைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மே 1-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சந்தையில் பொருட்களின் விலை உயர்வதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தைப் பயன்படுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 'Fleet Card' எனப்படும் எரிபொருள் அட்டையைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News