புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.22-
கடந்த மாதம் உள்ளூர்வாசி ஒருவருக்குச் சொந்தமான 400 ரிங்கிட் பணத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 வயது ஈரானியரான Hossein Yazdanjoo, இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் Cross Streetஇல் உள்ள வீட்டின் முன், பணத்தை மாற்றிக் கொள்வது போல் நடித்து, பாதிக்கப்பட்டவரிடமிருந்து 400 ரிங்கிட்டைப் பறித்துக் கொண்டு அவர் தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள டேஷ்காம் காட்சிகள் மூலம், காரைப் பயன்படுத்தித் தப்பியோடிய சந்தேக நபரை விரைவிலேயே காவற்படை கண்டுபிடித்தது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அபராதத்தைச் செலுத்திய பிறகு அவர் நீதிமன்ற வளாகத்தை விட்டுச் சென்றார்.








