கோலாலம்பூர், அக்டோபர்.1-
புடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், மாதம் ஒன்றுக்கு 600 லிட்டர் ரோன் 95 பெட்ரோலை பெறுவர் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 300 லிட்டர் பெட்ரோல் ரோன் 95, 600 லிட்டராக உயர்த்தப்படுகிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.
APAD (அபாட்) எனப்படும் தரைமார்க்க போக்குவரத்து ஏஜென்சியுடன் தரவுகள் சரிபார்க்கப்பட்டதில் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பெட்ரோல் விநியோகத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.








