Oct 3, 2026
Thisaigal NewsYouTube

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்: மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இருவர் காயம்

கோலாலம்பூர் ஸ்டண்டர்ட் சார்டட் மரத்தான் போட்டியில் பங்கேற்ற இரு ஓட்டப்பந்தய வீரர்கள், இன்று காலை ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞரால் மோதப்பட்டுக் காயமடைந்தனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் துறைத் தலைவர் ஸம்சுரி ஈசா கூறுகையில், மரத்தான் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி மோட்டார் சைக்கிள் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீஸ் துறையினர் நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும், அந்த இளைஞர் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளை ஓட்டித் தப்பிச் செல்ல முயன்றபோது, இரு ஓட்டப்பந்தய வீரர்கள் மீது மோதியதாகக் கூறினார்.

50 வயது பெண் ஓட்டப்பந்தய வீரரின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், 41 வயது ஆண் வீரர் வலது முழங்கால் மற்றும் கையில் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளோட்டியின் மதுப் பரிசோதனையில் 100 மில்லிலிட்டர் இரத்தத்தில் 164 மில்லிகிராம் அளவு மதுபானம் இருந்தது தெரிய வந்ததாக ஸம்சுரி தெரிவித்தார்.

அவர் மூன்று நாட்களும், பின்னிருக்கை அமர்ந்திருந்த 19 வயது இளைஞர் இரு நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

டெங்கில் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 மோட்டார் குண்டுகள் வெடிக்கச் செய்து அழிப்பு

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

இளைஞர்களுக்கான சிறப்பு நிதி: 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்- அன்வார் கோடி காட்டினார்

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

நேபாள பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம்: குடும்பங்களுக்கு நிதிச் சுமையிலிருந்து உடனடி நிவாரணம் தேவை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி மரணம்: குடும்பம் அரசுக்கு எதிராக வழக்கு

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் திறனை வளர்த்துக் கொள்ள தேவையானவறற்றைச் செய்வேன்- இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை

பேராக் மாநில நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கருத்துகளுக்கு ஆரம்பத்திலேயே நடவடிக்கை