Jun 9, 2026
Thisaigal NewsYouTube
விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி  எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி எச்சரிக்கை

Share:

மலேசியாவின் விசா இல்லா நுழைவு கொள்கை உலகளாவிய ஆன்லைன் மோசடி கும்பல்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது என போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இக்கொள்கை வெளிநாட்டு குற்றவாளிகள் இங்கு எளிதாக ஊடுருவ வழிவகுப்பதாக அவர் கூறினார்.

கடந்த மே 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அனைத்துலுக ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 129 சீன நாட்டவர் மற்றும் 23 மலேசியர்கள் உட்பட 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 38 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 3 சொகுசு வீடுகள், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 20 ஆடம்பர வாகனங்கள் மற்றும் 12 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் ஹாங்காங், சீனா, கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளது என்று இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதனிடையே சிங்கப்பூர் வட்டி கும்பல்களுடன் தொடர்புடைய 35 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், ஈப்போ போலீஸ் காவலில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஜிபி மேலும் குறிப்பிட்டார்.

Related News

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்