Apr 10, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

டீசல் விலை உயர்வு: நெல் சாகுபடியைக் கைவிடத் தயார் என மலேசிய விவசாயிகள் எச்சரிக்கை

Share:

டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடும் இழப்பு காரணமாக, மலேசிய நெல் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர்.

அலோர் ஸ்டார், லாங்காரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய நெல் விவசாயிகள் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் அப்துல் ரஷீத் யோப், உழுதல் மற்றும் அறுவடைக்கான செலவுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, டீசல் மானியக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் SKDS 1.0 மற்றும் 2.0 கீழ் நெல் சாகுபடித் துறை சேர்க்கப்படாததால், விவசாயிகள் ஒரு லிட்டர் டீசலை 6.72 ரிங்கிட் என்ற சந்தை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டிராக்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் பம்புகள் அனைத்தும் டீசலையே நம்பி இருப்பதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு மானியம் வழங்காவிட்டால் வரும் காலங்களில் நெல் சாகுபடியை நிறுத்தி வைக்கப் போவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related News