Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு வெளிநாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு வெளிநாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

வீடு புகுந்து திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இரண்டு அந்நிய நாட்டவர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்று அதிகாலையில் கோலாலம்பூர், செராஸ், ஜாலான் செமேரா பாடியில் போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அந்த இருவரையும் வளைத்துப் பிடிக்க போலீசார் முற்பட்ட வேளையில் அவர்கள், போலீசாரை எதிர்த்துப் போராடியதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் ஃபாடில் மர்சுஸ் தெரித்தார்.

முன்னதாக, அவர்கள் பயன்படுத்திய ஹொண்டா சிவிக் கார், கடந்த 2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் களவாடப்பட்ட வாகனமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News