தாவாவ், ஜூலை.25-
அண்டை வீட்டைச் சேர்ந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை சபா, தாவாவில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 34 வயதுடைய அந்தச் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனது தோழியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் அம்பலமானதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மீன் ஹுசேன் தெரிவித்தார்.








