Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தன

டிச. 15-

Taiping-இல் உள்ள ஒரு மருந்தகத்தில் கத்தியைக் காட்டி கொள்ளை நடந்தது குறித்த புகாரைப் பெற்ற நான்கே மணி நேரங்களில், ஒரு உள்ளூர் ஆடவரை போலீசார் கைது செய்தனர். தைப்பிங் மாவட்ட காவல் துறைத் தலைவர், ACP Mohamad Nasir Ismail இவ்விவகாரம் குறித்து கூறுகையில், 20 வயதான அந்த ஆடவர் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட கத்தியுடனும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடனும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்

நேற்று இரவு 10.27 மணிக்கு ஒரு பெண் மருந்தக உதவியாளர் அவர் பணிபுரியும் மருந்தகத்தில் கொள்ளையடிக்கப்பட்டார் என்ற புகாரைப் பெற்ற தகவலின் பேரில், போலீசார் நான்கே மணி நேரங்களில் சந்தேக நபரை கைது செய்தனர்

முகமது நசீர் மேலும் கூறுகையில், இரண்டு முந்தைய குற்ற பதிவுகள் கொண்ட அந்த ஆடவர், மேலதிக விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →