முதியவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அவரின் கழுத்தில் பாராங்கை வைத்து, அச்சுறுத்தி 20 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 4:15 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், ஃபெல்டா பலுங் எனாம் நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது. மிகுந்த பதற்றத்திற்கு ஆளான அந்த முதியவர் கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தி அந்த 4 கொள்ளையர்களும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர்ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
வீட்டின் பின்புறத்திலிருந்து நுழைந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 4 கொள்ளையர்கள் இந்தோனேசியர்கள் என்று நம்பப்படுகிறது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


