Sep 22, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ சரவணனுக்கு இலை போடப்பட்டப் பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டதா?

Share:

குற்றச்சாட்டை மறுத்தனர் நகரத்தார்கள்

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, இரண்டரை மைலில் உள்ள நகரத்தார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்வில் மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு இலைப்போட்டப் பின்னரே பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டதாக கூறப்படுவதை அந்த ஆலயத்தைச் சேர்ந்த செட்டியார் சமூகம் மறுத்துள்ளது.

மகேஸ்வர பூஜைக்கு பின்னர், அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் பெரும் திரளாக அமர்ந்துவிட்ட நிலையில், பிற்பகல் 1.45 மணி வரையில் அன்னதானம் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியோடு காத்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரவணன், அன்னதான மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கு இலைப் போட்டப் பின்னரே, பல மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக, பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்திருப்பது, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சரவணன் வருவதற்கும், அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டதும் எதிர்பாராத சம்பவமாகும். முன்னாள் அமைச்சர் வருகிறார் என்பதற்காக செட்டியார்கள் மரியாதை நிமித்தமாக அவரை அழைத்துச் சென்று சாப்பாட்டு இருக்கையில் அமர வைத்தனர். ஆனால், சரவணனுக்கு இலைப் போட்ட பின்னரே மற்றவர்களுக்கு சாப்பாடு போடப்பட்டது என்பது உண்மையில்லை என்று செட்டியார் சமூகம் வாதிட்டுள்ளனர்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு