Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

Share:

வரும் ஏப்ரல் மாதம் முதல், தாய்லாந்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மலேசிய வாகனமோட்டிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி, குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக 20,000 பாட், மலேசிய மதிப்பில் கிட்டத்தட்ட 2400 ரிங்கிட் வரை அபராதமும், ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

தாய்லாந்து நாட்டின் நாராதிவாட் பகுதி போக்குவரத்து அதிகாரிகள் இந்த கடுமையான நடவடிக்கையை அறிவித்துள்ளனர்.

இது அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும் என்றும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் தெரிவித்துள்ளனர்.

சாலை ஒழுங்கை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகின்றது.

Related News