வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், யோங் பெங், ஆர்&ஆர் வாகன ஓய்வுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றில் ஒரு பெண் உட்பட மூவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.50 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அதற்கு முன்னதாகவே பூட்டப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அந்த மூவரையும் பொது மக்கள் காரிலிருந்து வெளியேற்றியுள்ளனர் என்றும் பகோஹ் நிலையத்தின் கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார். எனினும் அந்த மூவரும் இறந்து விட்டனர் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
23 மற்றும் 25 வயதுடைய இரு ஆண்கள், 27 வயதுடைய ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கமாண்டர் சுஹைருலர் சரிப் தெரிவித்தார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


