Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அவசர சிகிச்சை உதவிக்கான நடைமுறையை, அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் ஆராயவுள்ளது.
தற்போதைய செய்திகள்

அவசர சிகிச்சை உதவிக்கான நடைமுறையை, அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் ஆராயவுள்ளது.

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

பூப்பந்து போட்டிகளில், அவசர சிகிச்சை உதவிக்கான நடைமுறையையும் கொள்கையையும் ஆராய, அனைத்துலக பூப்பந்து சம்மேளனம் - BWF முடிவெடுத்துள்ளது.

இந்தோனேசியா, யோக்யகர்த்தா -வில் நடைபெற்றுவந்த இளையோருக்கான பூப்பந்து போட்டியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீன வீரர் சாங் க்ஷி ஜியே மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அச்சம்மேளனம் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பான் வீரர் கஸுமா கவானோ-வுக்கு எதிரான ஆட்டத்தின் போது, திடிரென கீழே சுருண்டு விழுந்த 17 வயது க்ஷி ஜியே-வுக்கு, அப்போட்டியின் மருத்துவ குழுவினர் முதலுதவியை தாமதமாக வழங்கியதாலேயே, அவரது உயிர் பிரிந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆயினும், தங்களது மருத்துவ குழுவினரின் அந்நடவடிக்கையை, இந்தோனேசியாவின் பூப்பந்து சங்கம் - PBSI தற்காத்து பேசியிருந்தது.

போட்டியின் நடுவர் அனுமதியை அளிக்காத வரையில், தங்களது மருத்துவ குழுவினரால் ஆட்டக்களத்தினுள் நுழைய முடியாது எனவும் அச்சங்கம் விளக்கம் அளித்ததை அடுத்து, BWF அம்முடிவை எடுத்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்