Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் இந்திய மாது உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் இந்திய மாது உயிரிழந்தார்

நவ. 23-

கெடா, கூலிம், Jalan Guar Lobak என்ற இடத்தில் உள்ள சாலை சமிக்ஞை விளக்குப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஓர் இந்திய மாது உயிரிழந்தார்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை 3.51 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரான 68 வயது தனலெட்சுமி சுப்பிரமணியம் என்பவர் இவ்விபத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

பாடாங் செராய், தாமான் மசூரி, Fasa 4 B என்ற முகவரியை சேர்ந்த தனலெட்சுமி கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ஹாஜி சுல்கிப்லி அஸிசான் தெரிவித்தார்.

சமிக்சை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் நகரத் தொடங்கிய போது பின்னால் வந்த ஹினோ ரக லோரியால் மோதப்பட்டது. மோட்டர் சைக்கிலிருந்து கீழே விழுந்த தனலெட்சுமி, லோரியின் சக்கரங்களில் அரைப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுல்கிப்லி அஸிசான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →