Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இந்தியத் தொழில்முனைவர்களுக்கு தெக்கூன் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் - துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

இந்தியத் தொழில்முனைவர்களுக்கு தெக்கூன் நிதி அதிகரிக்கப்பட வேண்டும் - துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் கோரிக்கை

Share:

தற்கால சவால்களைக் கருத்தி, கொண்டு தெக்கூன் நேஷனலின் கீழ் நடப்பில் இருக்கும் SPUMI (ஸ்பூமி) எனப்படும் மலேசிய இந்தியர் தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் 3 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு போதாது எனவும், அந்த நிதி அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தொழில்முனைவர், கூட்டுறவு துணை அமைச்சர் ஆர் ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தை அமைச்சர் டத்தோ எவோன் பெனெடிக் இடம் தாம் கலந்து பேசி விட்டதாகவும், வெகு விரைவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹின் பார்வைக்கு அவர் கொண்டு செல்வதாக உறுதியளித்திருப்பதை டத்தோ ஆர் ரமணன் குறிப்பிட்டார்.

அதே சமயம், இந்திய சமுதாயத்திற்கு தமது அமைச்சின் கீழ் இயங்கி வரும் SME Corp, கூட்டுறவு ஆணையம் போன்ற இதர நிறுவனங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட தமக்கு அமைச்சர் ஆணை இட்டிருப்பதையும் ரமணன் சுட்டிக் காட்டினார்.

அதிகமான தொழில் முனைவர்களுக்கு உதவியும் வழிகாட்டலும் தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்ட அவர், தம்மாலும் அமைச்சாலும் என்ன முடியுமோ, நிச்சயம் அதனைச் செய்ய முற்படுவதாக ரமணன் தமது முகநூல் பதிவில் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்