கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி மலேசியா தனது 68 ஆவது மெர்டேக்கா தினத்தைக் கொண்டாடுகிறது.
நாடு முழுவதும் மெர்டேக்கா கொண்டாட்டம் களைக் கட்டியிருக்கும் இந்த தருணத்தில் தகவல் தொடர்புத் துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு பல இடங்களில் தேசியக் கொடிகளை வழங்கி வருகிறது.

நேற்று கோலாலம்பூர் மஸ்ஜிட் ஜாமேக் எல்ஆர்டி ரயில் முனையத்தில் நடைபெற்ற தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வில் தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கலந்து கொண்டார்.
செல்கோம் டிஜி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எல்ஆர்டி முனையத்தில் வந்திறங்கிய பொதுமக்களுக்கு துணை அமைச்சர் தியோ நீ சிங் தேசியக் கொடிகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
மலேசியர்கள் நாட்டுப் பற்றுடன் தங்கள் வீடுகளில் தேசியக் கொடிகளை பறக்க விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.








