Dec 5, 2025
Thisaigal NewsYouTube
எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கார் மோதியது: மருத்துவர் பலி
தற்போதைய செய்திகள்

எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கார் மோதியது: மருத்துவர் பலி

Share:

கோல திரங்கானு, ஜூலை.23-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி எரிவாயு சேமிப்புக் கிடங்கை மோதி, விபத்துக்குள்ளானதில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு கோல திரங்கானு, ஜாலான் கம்போங் உண்டாங்கில் நிகழ்ந்தது. கடுமையானக் காயங்களுக்கு ஆளான 35 வயது முகமட் ஹாரிஸ் ஹாஷிம் என்ற அந்த மருத்துவர், கோல திரங்கானு, சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரவு 11.33 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மருத்துவர், கம்போங் உண்டாங், ஃபுட்சால் விளையாட்டு மையத்திலிருந்து புக்கிட் பாயாஸை நோக்கி பெரோடுவா அல்ஸா காரில் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் குறிப்பிட்டார்.

Related News