கோலாலம்பூர், ஜூலை.20-
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. காற்று மாசுக் குறியீடு அளவு சிலாங்கூரில் ஜோஹான் செத்தியாவில் 155 ஆகவும், பந்திங்கில் 151 ஆகவும் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சுழல் இலாகா தெரிவித்துள்ளது.
இது நெகிரி செம்பிலான், நீலாயில் 156 ஆகவும், போர்ட்டிக்சனின் 153 ஆகவும் பதிவாகியுள்ளதாக அந்த இலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








