Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

Share:

தாம் எழுதிய நூலின் உள்ளடக்கம் குறித்து விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்புக் குழு செல்லத்தக்கதா? என்று கேள்வி எழுப்பி வழக்குத் தொடுத்துள்ள முன்னாள் சட்டத்துறைதலைவர் டோமி தோமஸ் வழக்கு மனு, தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

டோமி தோமாஸின் வழக்கு மனுவை ரத்து செய்தற்கு தாம் தயாராக இல்லை என்று நீதிபதி வான் அகமட் ஃபாரிட் வான் சாலெ தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சட்டத்துறை தலைவாக பொறுப்பேற்று இருந்த டோமி தோமஸ், தமது பதவி விலகலுக்கு பிறகு எழுதிய மை ஸ்தோரி: ஜஸ்டிஸ் இன் தீ வைல்டெர்னஸ் என்று நூல், சர்ச்சைக்கு இடமாக இருப்பதாகவும்,அந்த நூல் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து அரசாங்கம் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்தது.

எனினும் தம்மை விசாரணை செய்வதற்கு அந்த சிறப்பு பணிக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அந்த பணிக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக டோமி தோமஸ் வழக்கு தொடுத்து இருந்தார்.
டோமி தோமாஸின் அந்த வழக்கு மனு, தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோரி, அரசாங்கம் செய்து கொண்ட எதிர்மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Related News