Dec 4, 2025
Thisaigal NewsYouTube
செஜாதெரா மடானி திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

செஜாதெரா மடானி திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜூலை.24-

செஜாதெரா மடானி எனும் மடானி நல்லாழ்வுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தனியார் துறையிடமிருந்து வசூலிக்கப்பட்ட கிட்டத்தட்ட 120 மில்லியன் நிதியைக் கொண்டு பிரதமர் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மடானி அரசாங்கத்தில் இகாசேவில் தங்களைப் பதிவுச் செய்து கொண்டுள்ள பரம ஏழை குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் மடானி நல்வாழ்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அன்வார், இந்த மடானி நல்வாழ்வுத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் வசூலிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 50 மில்லின் ரிங்கிட்டாகும். ஆனால், இலக்கை விட அதிக தொகை வசூலாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News