இஸ்ரேலுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள அரச தந்திர உறவு, மலேசியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சிங்கப்பூர் பிரதமர லீ சியான் லூங் உறுதி அளித்துள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், அக்குடியரசின் பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், சிங்கப்பூர் இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருப்பதால் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு சிங்கப்பூர் பிரதமர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








