புத்ராஜெயா, டிசம்பர்.26-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் புரிந்துள்ள குற்றத்தன்மையை நிரூபிப்பதில் வெற்றி பெற்றுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் புலனாய்வு அதிகாரிகளையும், வழக்கைச் செம்மையுற வழிநடத்திய பிராசிகியூஷன் தரப்பையும் அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி வெகுவாகப் பாராட்டினார்.
புலனாய்வு அதிகாரிகளின் அசாத்தியமான அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.
இதற்காக உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேவையான ஆவணங்களைச் சேகரிப்பதில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளப்பரியதாகும் என்று அஸாம் பாக்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








