May 4, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை கோவில் விவகாரம்: சட்டவிரோதக் கூட்டங்களுக்குத் தடை – பினாங்கு போலீஸ் தலைவர் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை கோவில் விவகாரம்: சட்டவிரோதக் கூட்டங்களுக்குத் தடை – பினாங்கு போலீஸ் தலைவர் கடும் எச்சரிக்கை

Share:

கோவிலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஆத்திரமூட்டும் பதிவுகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக பினாங்கு மாநில போலீஸ் துறை இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது பதற்றத்தை உருவாக்கும் வகையிலான எந்தவொரு சட்டவிரோதக் கூட்டத்திலும் பொதுமக்கள் பங்கேற்கவோ அல்லது அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் வீற்றிருக்கும் ஒரு இந்து கோயில் தொடர்பில் மக்கள் திரள வேண்டும் என்று சமயப் போதகர் ஜம்ரி வினோத் என்பவர், ஆத்திரமூட்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அளித்த புகாரின் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டத்தோ அசிஸி தெரிவித்தார்.

வரும் மார்ச் 7-ஆம் தேதி சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவிலுக்கு எதிராக ஒரு ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் துறை நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போதுள்ள சட்டங்களை யாராவது மீறினால் அவர்கள் மீது சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ அசிஸி எச்சரித்துள்ளார்.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்