கோலாலம்பூர், நவம்பர்.24-
நேற்று பிற்பகலிருந்து கொட்டித் தீர்த்து வரும் அடை மழையைத் தொடர்ந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 921 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இன்று மாலையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இத்துடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒன்பதாவது மாநிலமாக கூட்டரசுப் பிரதேச கோலாலம்பூர் விளங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தகவல்படி மாலை வரை 39 நிவாரண மையங்களில் 9 ஆயிரத்து 689 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








